பொதுத் தேர்தல் நடத்துவதற்கு வசதியாக மலேசிய நாடாளுமன்றத்தை கலைப்பதாக அந்நாட்டுப் பிரதமர் அகமது படாவி இன்று அறிவித்தார்.
விரைவில் பொதுத் தேர்தல் நடத்துவதற்கு வசதியாக நாடாளுமன்றம் இன்று கலைக்கப்படுவதாகவும், அதற்கான ஒப்புதலை மன்னர் அளித்திருப்பதாகவும் கோலாலம்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய படாவி தெரிவித்தார்.
நாடாளுமன்றத்துடன் மலேசியாவில் உள்ள மற்ற மாகாண சட்டப் பேரவைகளும் கலைக்கப்படுவதாகவும், நாடாளுமன்றம், சட்டப் பேரவைகளுக்கான தேர்தல் தேதியைத் தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.