Publish Date: Wed, 13 Feb 2008 (11:06 IST)
Updated Date: Wed, 13 Feb 2008 (11:05 IST)
மன்னாரில் சிறிலங்கா ராணுவத்தினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடந்த கடும் மோதலில் 28 படையினர் கொல்லப்பட்டதாக புலிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
மன்னார் பாலைக்குழி பகுதியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை 8.30 மணியளவில் அடம்பன் நோக்கி முன்நகர்ந்த சிறிலங்காப் படையினர் மீது விடுதலைப் புலிகள் தீவிரத் தாக்குதலை நடத்தியதாகவும், இதில் 28 படையினர் கொல்லப்பட்டதுடன் மேலும் பலர் படுகாயமடைந்ததாகவும் புதினம் இணைய தளச் செய்தி தெரிவிக்கிறது.
இலங்கை, மன்னாரில் அடம்பன், தள்ளாடி படைத்தளம் ஆகிய இடங்களில் நடந்த மோதல்களில் நேற்று ஒரே நாளில் மட்டும் 43 படையினர் கொல்லப்பட்டதாக புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், இம்மோதல்களில் 54 புலிகள் கொல்லப்பட்டதாக சிறிலங்க பாதுகாப்பு அமைச்சகத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.