மன்னார் தள்ளாடி படைத்தளத்தின் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதலில் சிறிலங்காப் படையினர் 15 பேர் கொல்லப்பட்டதுடன், 50 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளதாக புதினம் இணைய தளச் செய்தி தெரிவிக்கிறது.
தள்ளாடி படைத்தளத்தின் மீது இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9.00 மணிக்கு விடுதலைப் புலிகள் தங்கள் தாக்குதலைத் துவக்கியதாகவும், இதில், 15 சிறிலங்கப் படையினர் கொல்லப்பட்டதுடன் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அச்செய்தி கூறுகிறது.
விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்குப் பதிலடி கொடுத்த ராணுவத்தினர், மன்னார் பகுதியில் உள்ள எல்லாத் தகவல் தொடர்புகளையும் துண்டித்ததுடன் போக்குவரத்தையும் தடை செய்தனர்.