மன்னாரில் தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் சிக்கி சிறிலங்க ராணுவத்தினர் 16 பேர் படுகாயமடைந்தனர்.
இலங்கையில் மன்னார் மாவட்டம் விளாத்திக்குளம், முள்ளிக்குளம், பந்திவிரிச்சான் ஆகிய பகுதிகளில் தாங்கள் புதைத்திருந்த கண்ணிவெடியில் சிக்கி சிறிலங்க ராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியைச் சேர்ந்த 16 பேர் படுகாயமடைந்ததாக தமிழீழ விடுதலைப் புலிகள் ஆதரவு இணைய தளமான தமிழ்நெட்.காம் செய்தி தெரிவிக்கிறது.