பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த குற்றச்சாற்றின் பேரில் 11 இந்திய மீனவர்களை அந்நாட்டுக் கடற்படையினர் கைது செய்தனர்.
பாகிஸ்தானின் முக்கியத் துறைமுக நகரமான கராச்சிக்கு அருகில் அத்துமீறித் தங்கள் நாட்டுக் கடல் எல்லைக்குள் நுழைந்து மீன் பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டுக் கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தப் பருவத்தில் கராச்சிக்கு அருகில் நல்ல மீன்வளம் இருக்கும் என்பதால், மீண்டும் மீண்டும் எச்சரித்தாலும் அதைக் கண்டுகொள்ளாமல் இந்திய மீனவர்கள் தவறு செய்வதாக கராச்சி துறைமுகக் கடற்படை அதிகாரி முகமது தாரிக் தெரிவித்தார்.
இதேபோலக் கடந்த மாதம் 4 சம்பவங்களில் 26 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பதும், இவ்வாறு மாதந்தோறும் பாகிஸ்தான் சிறைகளில் அடைக்கப்படும் நமது மீனவர்கள், மத்திய அரசின் விரைவான நடவடிக்கைகளால் உடனடியாக விடுவிக்கப்படுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.