Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிறுநீரக திருட்டு : மருத்துவர் அமித் குமார் காட்மாண்டு கொண்டுவரப்பட்டான்!

சிறுநீரக திருட்டு : மருத்துவர் அமித் குமார் காட்மாண்டு கொண்டுவரப்பட்டான்!
, வெள்ளி, 8 பிப்ரவரி 2008 (13:54 IST)
நாட்டை உலுக்கிய சிறுநீரக திருட்டுக் கும்பலின் தலைவன் மருத்துவர் அமித் குமார் இன்று நேபாளத் தலைநகர் காட்மாண்டுவிற்கு கொண்டுவரப்பட்டான். அவனை இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கு மத்திய புலனாய்வுக் கழகம் தீவிர முயற்சி செய்து வருகிறது.

சிறுநீரக திருட்டிற்கு மூளையாக செயல்பட்ட டாக்டர் அமித் குமாரை நேபாள காவல் துறையினர் நேற்று கைது செய்தனர். இவரை இந்திய காவல்துறையிடம் ஒப்படைப்பது குறித்து தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

ஹரியானா மாநிலத்தில் குர்கோவான் பகுதியில் காவல் துறையினர் நடத்திய ஆய்வில் சிறுநீரக திருட்டு வெளிச்சத்திற்கு வந்தது. சிறுநீரக திருட்டு கும்பலைச் சேர்ந்த டாக்டர் உபேந்திரா உட்பட சிலர் கைது செய்யப்பட்டனர். இந்த கும்பல் 7 ஆண்டுகளாக 500-க்கும் மேற்பட்டவர்களிடம் இருந்து சிறுநீரகங்களை திருடி அயல்நாடுகளுக்கு விற்று, பல நூறு கோடிக்கணக்கான பணத்தை முறைகேடாக சம்பாதித்துள்ளது.

தலைமறைவான இந்த கும்பலின் தலைவன் டாக்டர் அமித் குமார் (40) மற்றும் அவரது சகோதரரை பிடிக்க சர்வதேச காவல் படை (இன்டர்போல்) உலக நாடுகளுக்கு அறிவிப்பு செய்தது. இந்நிலையில், சிறுநீரக திருட்டு மோசடி நேபாளத்திலும் நடந்துள்ளது அம்பலமானது. நேபாளத்தில் உள்ள ஒரு ஓட்டலில் அமித்குமாரின் பாஸ்போர்ட் கைப்பற்றப்பட்டது. அதன்மூலம், கடந்த மாத இறுதியில் அமித்குமார் நேபாளத்திற்கு வந்ததும், அங்கு தலைமறைவாக இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

அதன்பிறகு, நேபாள காவல்துறையினரின் தீவிர ஆய்வு மேற்கொண்டதில், இந்திய எல்லைப்பகுதியான சித்வான் மாவட்டத்தில் உள்ள ஓட்டலில் தங்கியிருந்த அமித்குமார் நேற்று மாலை 5.00 மணிக்கு கைதுசெய்யப்பட்டார்.

'அவரை காத்மாண்டு காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளதாகதாகவும். அமித்குமார் தற்போது ஹனுமந்தோகா காவல்நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும்' காவல்துறை உயர் அதிகாரி கிரண் கவுதம் கூறினார்.

இந்நிலையில், அமீத்குமாரை இந்திய காவல்துறையிடம் ஒப்படைப்பதா? அல்லது நேபாளில் நடந்த சிறுநீரக திருட்டு சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்துவதா? என்பது குறித்து காத்மாண்டு காவல்துறையினர் ஆலோசித்து வருவதாகவும், இதுகுறித்த தகவல்களை தெரிவிக்க பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் 'தி இமாலயன் டைம்ஸ்' நேபாளிய நாளிதழ் தெரிவித்துள்ளது.

'என்னை தப்பிக்க விட்டால் ரூ.20 லட்சம் தருவேன்':

காவல்துறை கைது செய்யுள்ளதை அறிந்த டாக்டர் அமித்குமார் தப்பிக்கும் முயற்சியில் பேரம் பேசியுள்ளான. "என்னை தப்பிக்கவிட்டால் ரூ.20 லட்சம் தருவேன்' என்று அமித்குமார் கூறியதாக ஓட்டல் பணியாளர் மகேஸ்வர் ரேக்மி என்பவர் தெரிவித்துள்ளார். மேலும், தனது அடையாளத்தை மறைக்க அமித்குமார் தொப்பியும், கண் கண்ணாடியும் அணிந்துள்ளார்.

கைது செய்யப்பட்ட அமித்குமாரிடம் 1.45 லட்சம் அமெரிக்க டாலர், 9.35 லட்சம் யூரோ மற்றும் நேபாள பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil