உலகம் முழுவதும் தற்போது வெளியேற்றப்படும் கார்பன்-டை-ஆக்ஸைடின் அளவை 50 விழுக்காடாக வரும் 2050-ஆம் ஆண்டுக்குள் குறைப்பதற்கு புதிய எரிசக்தி ஊள்கட்டமைப்பு, உபகரணங்களுக்கு 18 முதல் 50 டிரில்லியன் டாலர் அதாவது ரூ.18 முதல் 50 லட்சம் கோடி தேவைப்படும் என பன்னாட்டு எரிசக்தி முகமை கணித்துள்ளதாக அதன் செயல் இயக்குநர் நொபு டான்கா தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் பாரீஸில் நடைப்பெற்ற உலகிள் 30 முன்னணி எரிசக்தி நிறுவனங்களின் தலைமை தொழில் நுட்ப அலுவலர்கள் பங்கேற்ற வட்ட மேஜை மாநாட்டின் போது முன்வைக்கப்பட்டு, பன்னாட்டு எரிசக்தி முகமையும், தொழில் நுட்ப வல்லுநர்களும் கூட்டாக இணைந்து வெளியிட்ட அறிக்கையில், உலக நாடுகளின் இதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாகத் தொடங்குமாறு அறைக்கூவல் விடுத்துள்ளனர்.
எரிசக்தி தொடர்பான உயர் தொழில் நுட்பங்களை உருவாக்குவது, பயன்படுத்துவது ஆகியவை தொடர்பாக அரசுகளின் செயல்பாடுகள் துரிதமாக நடைபெற வேண்டும் என்றும், அதேநேரத்தில் சுத்தமான, நம்பகத் தன்மைக் கொண்ட, நீண்டகால பொருளாதார பயனான, கார்பன்-டை-ஆக்ஸைட் குறைப்பதால் சந்தையில் கிடைக்கும் நிவாரணம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒர கொள்கையை வடிவமைத்து செயல்படுத்த அரசுகள் முன்வர வேண்டும் என்றும் அதிதீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கார்பன்-டை-ஆக்ஸைட் தற்போது வெளியேற்றப்படும் அளவை 50 விழுக்காடாக குறைப்பதற்கு, பல்வேறு தொழில் நுட்பங்களைப் கயன்படுத்த வேண்டும் என பன்னாட்டு எரிசக்தி முகமை வலியுறுத்தி வருகிறது. எரிசக்தி திறன் அதிகரிக்கப்பட்ட வாகனங்கன், கட்டடங்கள், மறுசுழற்சி எரிசக்தி பயன்பாடு, திறன் உயர்த்தப்பட்ட மின் உற்பத்தி நிலையங்கள், அணுசக்தி, அதிக திறன் கொண்ட எரிசக்தி பரிமாற்றம் - விநியோகம், மேம்படுத்தப்பட்ட தாவர எண்ணெய் பயன்பாடு என பல்வேறு தொழில் நுட்பங்களை வழிமுறையாக பன்னாட்டு எரிசக்தி முகமை தெரிவித்துள்ளது.
எரிசக்தி உற்பத்தி மற்றும் பயன்பாட்டின் மூலம் கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியேற்றுவதில் தற்போதைய நடைமுறையே தொடர்ந்து பின்பற்றப்படுமானால், வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் 55 விழுக்காடு அதிகரித்து பூமியில் இருந்த வெளியேற்றப்படும் கார்பன்-டை-ஆக்ஸைடின் அளவு 4,200 கோடி டன்களாக அதிகரிக்கும் என்றும் பன்னாட்டு எரிசக்தி முகமை எச்சரித்துள்ளது.
அண்மைக் காலமாகவே கார்பன்-டை-ஆக்ஸைடின் வெளியேற்றம் கணிசமான அளவு அதிகரித்த வண்ணமே உள்ளது. இதனை நிறைவேற்ற நீண்ட காலம் பொறுத்திருந்தால்,பருவநிலை மாற்றத்தில் ஏற்படும் விளைவுகளை நம்மால் எதிர்க் கொள்வது என்பது கடினமானதாகிவிடும் என்றும், இதனை அரசுகள் மட்டும் செய்துவிட முடியாது, தனியாரின் பங்களிப்பும் இதனை அடைய இன்றியமையாதது என்று பன்னாட்டு எரிசக்தி முகமையின் செயல் இயக்குநர் நொபு டான்கா கூறியுள்ளார்.