Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கல்வி, வேலை வாய்ப்பில் இந்தியா பின்தங்கியுள்ளது: உலக வங்கி!

கல்வி, வேலை வாய்ப்பில் இந்தியா பின்தங்கியுள்ளது: உலக வங்கி!
, வியாழன், 7 பிப்ரவரி 2008 (17:53 IST)
'இந்திய சமுதாயத்தில் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் உடல் ஊனமுற்றோர் பின்தங்கியுள்ளனர். அவர்களுக்கு உரிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதன்மூலம் நாடே பயனடையும்' என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.

தற்போது இந்தியாவில் பெரும்பாலான உடல் ஊனமுற்றோர் வறுமையில் வாடும் சூழலே நிலவுகிறது. சராசரிக்கும் குறைவாகவே அவர்களுடம் உடமைகளும் உள்ளன. நுகர்வு தன்மையும் நிலையிலேயே உள்ளது.

உடல் ஊனமுற்ற குழந்தைகள் ஆதிதிராவிட குழந்தைகளை விட ஐந்து மடங்கு பின்தங்கிய நிலையிலேயே அடிப்படைக் கல்வி பெறுகின்றனர். கல்வியறிவு பெற்ற ஊனமுற்றவர்களை பொருத்தவரை, அவர்களது திறமை மிக உயர்ந்த விகிதத்தில் உள்ளது.

சாதாரணமானவர்களை விட, மிகக் குறைவாகவே அவர்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கிறது. கடந்த 1991-ம் ஆண்டில் 43 விழுக்காடாக இருந்த உடல் ஊனமுற்றோர்க்கான வேலை வாய்ப்பு விகிதம், 2002-ம் ஆண்டில் 38 விழுக்காடாக குறைந்துள்ளது.

உலக வங்கி அறிக்கைக்கான முதன்மை ஆசிரியர் பிலிப் ஒகீபே கூறுகையில், "அதிகரித்து வரும் சமூக, பொருளாதார வளர்ச்சியில் ஊனமுற்றோர்க்கு சாதகமான வளங்களும், வாய்ப்புகளும் கிடைக்க வேண்டியது அவசியம்.

இந்தியாவிலுள்ள 40 முதல் 90 மில்லியன் உடல் ஊனமுற்றவர்களுக்கு உயர்ந்த கல்வி மற்றும் வேலைவாய்ப்பு அளிப்பதனால் நாடே பயன்பெறும். உடல் ஊனமுற்றோர்க்கு வசதியளிக்கும் போக்குவரத்து, கட்டுமானங்களின் வளர்ச்சியில் கற்பிணிகளும், குழந்தைகளும், முதியவர்களும் பயனடைவது இதற்கு ஒரு சிறந்த உதாரணம்" என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil