மன்னாரில் விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா ராணுவத்தினருக்கும் இடையில் நடந்த கடுமையான மோதலில் ராணுவத்தினர் 5 பேர் கொல்லப்பட்டதுடன், 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை 9.30 மணி முதல் பாலைக்குழியில் பதுங்கியிருந்த ராணுவத்தினர் அடம்பனில் உள்ள புலிகளின் நிலைகளின் மீது தாக்குதல் நடத்தியதாக புதினம் இணையதளச் செய்தி தெரிவிக்கிறது.
இம் முன்நகர்வுக்கு எதிராக விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் 5 ராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன், 7 பேர் காயமடைந்தனர். இந்த மோதல் 3 மணி நேரத்திற்கு மேல் நீடித்ததாகத் தெரிகிறது.
கிளிநொச்சியில் விமானத் தாக்குதல்!
கிளிநொச்சி திருவையாற்றுப் பகுதியில் உள்ள பொதுமக்களின் வீடுகள் மீது சிறிலங்க விமானப்படையின் மிக்-27 ரக விமானங்கள் இன்று குண்டுகளை வீசித் தாக்கியுள்ளன.
காலை 8.30 மணிக்கு இத்தாக்குதல் தொடங்கியதாகவும், மொத்தம் 20 குண்டுகள் வீசப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுமக்கள் பதுங்கு குழிகளுக்குள் இருந்ததால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.