பாகிஸ்தானில் உள்ள அணு ஆயுதங்கள் என்னதான் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் பாதுகாப்பாக இருந்தாலும், அவை தவறானவர்களின் கைகளில் சிக்குவதற்கான ஆபத்து அப்படியேதான் உள்ளது என்று அமெரிக்க உளவு நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.
இது குறித்து அமெரிக்க உளவு அமைப்பின் தலைவர் மைக் மெக்கனெல் கூறுகையில், "உள்நாட்டுப் பாதுகாப்புடன் கூடிய அணு ஆயுதக் கொள்கைகளை பாகிஸ்தானின் அரசியல் நெருக்கடிகள் பாதிக்கவில்லை என்றாலும், அணு ஆயுதங்களுக்கு அச்சுறுத்தல் உள்ளது" என்றார்.
"அமெரிக்காவைத் தாக்கும் அளவிற்கு வளர்ச்சி பெற்றுள்ள அல் கய்டா இயக்கம், பாகிஸ்தானின் பழங்குடியினர் பகுதியில் பரவி வருவது கவலை அளிக்கிறது. முன்னர் அமைதியாக இருந்த பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதிகளில் தலிபான்கள் மூலம் பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளனர்.
ஆஃப்கானிஸ்தான் தலைநகர் காபூலைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் இதே நிலை நீடிக்கிறது. அதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்" என்றார் மைக் மெக்கனெல்.