மலேசியாவில் உள்ள தமிழ்ப் பள்ளிகளைச் சீரமைக்க அந்நாட்டு அரசு 20 மில்லியன் ரிங்கிட்டுகளை ஒதுக்கியுள்ளது.
செலங்கர், கேடா, பெனாங், பெராக் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள தமிழ்ப் பள்ளிகளைச் சீரமைப்பதற்கும், புதிய கட்டடங்களைக் கட்டுவதற்கும் இந்நிதி பயன்படுத்தப்படும்.
தமிழ்ப் பள்ளி மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக அந்நாட்டுப் பணிகள் துறை அமைச்சர் டத்தோ எஸ்.சாமி வேலு தெரிவித்தார்.
ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் 10.9 மில்லியன் ரிங்கிட்டுகள் செலங்கரில் உள்ள 10 பள்ளிகளை இடித்துவிட்டுப் புதிதாகக் கட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.