கொழும்பு வாழா தேசிய பூங்காவில் இன்று காலை கையெறி குண்டுகள் வீசப்பட்டதில் 4 பேர் படுகாயமடைந்தனர்.
நேற்று பயணிகள் பேருந்தில் நடந்த குண்டுவெடிப்பில் 20 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தின் பரபரப்பே இன்னும் குறையாத நிலையில், இன்று காலை நடந்த குண்டு வீச்சு சம்பவம் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிறிலங்காவில் நாளை சுதந்திர தின விழா கொண்டாடம் நடைபெற உள்ள நிலையில் இந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் அந்நாட்டின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது.
இதனையடுத்து, சுதந்திர தினத்தில் எந்த அசம்பாவிதமும் நடக்காமல் தடுக்க, கொழும்பு நகரில் காவல்துறை மற்றும் ராணுவ பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு 5,000 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.