பக்ரைனில் கடல் சீற்றத்தில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இந்திய மாலுமிகள் 17 பேர் ஹெலிகாப்டர் உதவியுடன் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இந்தியர் ஒருவருக்குச் சொந்தமான சித்நாத் என்ற படகு 485 டன் அரிசி மூட்டைகளுடன் துபாயில் இருந்து ஈராக்கிற்குச் சென்று கொண்டிருந்தது.
இப்படகு பக்ரைன் கடல் எல்லையில் நுழைந்தபோது எதிர்பாராத வகையில் கடுமையான கடல் சீற்றம் ஏற்பட்டது. சுமார் 10 மீட்டர் உயரத்திற்கு எழுந்த அலைகளில் படகு சிக்கிக் கவிழும் ஆபத்து ஏற்பட்டது.
அதற்குள் தகவலறிந்த பக்ரைன் கடற்படையினர், ஹெலிகாப்டர் உதவியுடன் படகில் இருந்த 17 மாலுமிகளையும் மீட்டனர். இவர்கள் அனைவரும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
தற்போது மருத்துவச் சோதனைக்காக மருத்துவமனையில் உள்ள இவர்கள் 17 பேரையும் இந்தியாவிற்கு அழைத்துவர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.