சவுதி அரேபியாவில் நடந்த சாலை விபத்தில் 2 இந்தியர்கள் உள்பட 14 பேர் பலியானார்கள்.
சவுதி அரேபியா தலைநகர் ரியாத்திலிருந்து 340 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அப்குவைக் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த பேருந்தின் மீது எதிரே வந்த டிரக் நேருக்கு நேர் மோதியது.
இந்த பயங்கர விபத்தில், பேருந்து தலைகீழாக கவிழ்ந்து பல அடி தூரம் இழுத்துச் செல்லப்பட்டது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 14 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். இவர்களில் 2 பேர் இந்தியர்கள்; மூன்று பாகிஸ்தானியர்கள்; 11 பேர் பங்களாதேஷை சேர்ந்தவர்கள்.
வளைகுடா நாடுகளில் முக்கியமான ஒன்றான சவுதி அரேபியாவில் தெற்காசிய நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். குறிப்பாக இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளை சேர்ந்த தொழிலாளர்கள் அங்கு அடிப்படை கட்டமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.