Publish Date: Tue, 29 Jan 2008 (21:56 IST)
Updated Date: Tue, 29 Jan 2008 (21:56 IST)
இலங்கையின் வட மேற்குப் பகுதியிலுள்ள மன்னாரில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்றுக் கொண்டிருந்த பேருந்து மீது சிறிலங்க ராணுவத்தினர் நடத்திய கிளைமோர் தாக்குதலில் 11 மாணவர்கள் உட்பட 17 பேர் கொல்லப்பட்டனர்.
மன்னார் பகுதியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள தட்சணாமருத மடு என்ற இடத்திற்கு ஊடுறுவிய சிறிலங்க ராணுவத்தின் இத்தாக்குதலை நடத்தியதாக புதினம் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இன்று மதியம் 2.30 மணியளவில் பள்ளி மாணவர்களை ஏற்றிக் கொண்டு திரும்பியபோது நடத்தப்பட்ட இத்தாக்குதலில் மேலும் 9 மாணவர்கள் உட்பட 18 பேர் படுகாயமுற்றதாகவும் அச்செய்தி கூறுகிறது.
கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் 8 முதல் 16 வயதிற்கு உட்பட்டவர்கள் என்றும் அச்செய்தி தெரிவிக்கிறது.
Webdunia
Publish Date: Tue, 29 Jan 2008 (21:56 IST)
Updated Date: Tue, 29 Jan 2008 (21:56 IST)