அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்சிற்கு மிரட்டல் விடுத்த இளைஞரை அந்நாட்டு உளவுத் துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
வெள்ளை மாளிகையின் வடக்குப் புறத்தில் உள்ள சாலையில் அந்த இளைஞர் நின்றிருந்ததாகவும், அவரின் கையில் மர்மப் பார்சல் ஒன்றை வைத்திருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து அமெரிக்க ரகசிய சேவை அமைப்பின் செய்தித் தொடர்பாளர் எட் டோனோவன் கூறுகையில், "கைதான இளைஞர், நியூ ஜெர்சியை சேர்ந்த 28 வயதான அலெக்சாண்டர் அலெக்சோவ் என்று தெரிகிறது. அதிபரை மிரட்டியதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட மர்மப் பார்சலில் அச்சுறுத்தும் வகையில் எந்த பொருளும் இல்லை" என்றார்.