Publish Date: Mon, 28 Jan 2008 (19:12 IST)
Updated Date: Thu, 06 Mar 2014 (21:35 IST)
இலங்கை இனப் பிரச்சனைக்கு அரசின் அதிகாரப் பகிர்வுத் திட்டத்தின் மூலம்தான் தீர்வு காண முடியும் என்று சிறிலங்கா பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக கூறியுள்ளார்.
அதிகாரப் பகிர்வு தொடர்பாக அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு அண்மையில் சமர்பித்த அறிக்கையில், இனப் பிரச்சனைக்கான தீர்வு மற்றும் தீவிரவாதத்தை ஒழிப்பது குறித்து ஏராளமான ஆலோசனைகள் கூறப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
கடந்த வாரம் கொழும்பு வந்த ஈரான் வர்த்தக அமைச்சர் மசூத் மிர் காஷிமியிடம் பேசுகையில, பிரதமர் ரட்னசிறி விக்ரம நாயக இவ்வாறு கூறியதாக கொழும்பு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தமிழர்களுக்கு எதிராக சிறிலங்கா ராணுவம் செயல்பட்டு வருவதாக சில கெட்ட சக்திகள், அவதூறு பிரச்சாரம் செய்து வருவதாகக் குற்றம்சாற்றிய அவர், பயங்கரவாதிகளிடம் சிக்கியுள்ள மக்களை மீட்கவே அரசு முயன்று வருகிறது என்றார்.