அமெரிக்க முன்னாள் அதிபர் கிளிண்டன் மனைவி ஹிலாரிக்கு 2வது தடவையாக தோல்வி அடைந்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் நடக்க இருக்கிறது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்ய அந்த கட்சி சார்பில் மாநில வாரியாக தேர்தல் நடைபெற்று வருகிறது.
இதில் கிளிண்டன் மனைவி ஹிலாரிக்கும், ஒபாமாவுக்கும் கடும் போட்டி நிலவுகிறது. தெற்கு கரோலினா மாநிலத்தில் நடந்த தேர்தலில் ஒபாமா 55 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். ஹிலாரிக்கு 28 விழுக்காடு வாக்குகளே கிடைத்தன.
ஹிலாரிக்கு இது 2-வது தோல்வி. ஏற்கனவே அயோவா மாநிலத்தில் ஹிலாரி தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.