Publish Date: Sun, 27 Jan 2008 (14:06 IST)
Updated Date: Thu, 06 Mar 2014 (21:35 IST)
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் இந்தோனேஷிய அதிபர் சுகார்த்தோ இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 86.
இந்தோனேஷியாவின் கம்யூனிச ஆட்சியை அகற்றி விட்டு ஆட்சிக்கு வந்த சுகார்த்தோ 32 ஆண்டுகள் பதவியில் இருந்தார். 1998ல் அவர் பதவி விலகினார்.
சர்வாதிகாரியாக கருதப்பட்ட சுகார்த்தோ, கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய உடல்நிலை தேறிவருவதாக நேற்று மருத்துவர்கள் அறிவித்திருந்தனர். இந்நிலையில் இன்று காலை அவர் மரணமடைந்தார்.
உள்ளூர் நேரப்படி அதிகாலை 1.10 மணியளவில் அவர் உயிர் பிரிந்ததாக அரசு அறிவித்துள்ளது. நேற்று நள்ளிரவு அவருக்கு திடீரென ரத்த அழுத்தம் பாதிக்கப்பட்டதையடுத்து உடல்நிலை மோசமானதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.