அணு ஆயுதத்தைச் சுமந்தபடி 700 கி.மீ தொலைவில் உள்ள இலக்கைத் தாக்கவல்ல ஷகீன்- 1 ஏவுகணையை பாகிஸ்தான் இன்று வெற்றிகரமாகச் சோதனை செய்தது.
இச்சோதனையின்போது ராணுவத் தளபதி அஸ்ஃபாக பர்வேஷ் கியானியும், மூத்த ராணுவ அதிகாரிகளும் உடன் இருந்தனர். சோதனை வெற்றிகரமாக முடிந்ததும், அதற்குக் காரணமாக இருந்த விஞ்ஞானிகளை கியானி பாராட்டினார்.
இந்த ஆண்டுக்கான ராணுவக் களப் பயிற்சியின் முடிவில் இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் எந்த ஏவுதளத்தில் இச்சோதனை நடந்தது என்பது பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை.