துபாயில் உரிய ஆவணங்கள் இன்றித் தங்கியிருந்த 260 இந்தியர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
துபாயில் தங்கியுள்ள சுமார் 3,00,000 அயல் நாட்டவர்களின் ஆவணங்களையும் சரிபார்த்து, அவர்களை முறைப்படுத்தும் பணியை அந்நாட்டு அரசு தீவிரப்படுத்தி உள்ளது. இதற்காக அயல் நாட்டவர்கள் தங்கியுள்ள பகுதிகளில் அடிக்கடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சார்ஜாவில் நடத்தப்பட்ட சோதனையில் 267 இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர். இதில் 67 பேருக்கு எந்தவிதமான அடையாள அட்டைகளோ, ஆவணங்களோ கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
"துபாயில் தங்கியுள்ள அயல் நாட்டவர்களில் பலரின் விசாக்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே காலாவதியாகி விட்டன. இதில் பலர் தங்களுடன் பணியாற்றும் ஊழியர்களின் உதவியுடன் சட்ட விரோதமாக துபாய்க்கு வந்தவர்கள் ஆவர்" என்று சார்ஜா காவல் அதிகாரி அல் ஷாம்ஷி கூறினார்.