Newsworld News International 0801 24 1080124026_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்திய மாணவரை சுட்டது யார்? அமெரிக்க காவல்துறை அலட்சியம்!|

Advertiesment
அமெரிக்கா இந்திய மாணவர் சுட்டுக்கொலை
, வியாழன், 24 ஜனவரி 2008 (15:33 IST)
அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக இதுவரை அந்நாட்டு காவல்துறைக்கு எந்த துப்பும் கிடைக்கவில்லையாம்.

ஜார்கண்ட்டை சேர்ந்த அபிஜீத் மஹாடோ (29) அமெரிக்காவின் வடக்கு கரோலினா பகுதியில் உள்ள டுயூக் பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி., ஆராய்ச்சி செய்து வந்தார். இவர் கடந்த வெள்ளிக்கிழமை அவரது அறையிலேயே சுட்டுக் கொலை செய்யப்பட்டார். ஆனால் இந்த கொலை சம்பவம் தொடர்பாக துர்ஹம் போலீசார் இதுவரை துப்பு துலக்கவில்லை.

இந்நிலையில், பல்கலைக்கழக வளாகத்தில் நாளை மஹாடோவின் நினனவு தினம் கடைபிடிக்கப்பட உள்ளது. இது தவிர, ஞாயிற்றுக்கிழமை வடக்கு கரோலினாவின் மோர்ரிஸ்வில்லே பகுதியில் உள்ள இந்து கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil