Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முதன்மை முகாம் அழிக்கப்பட்டதா? விடுதலைப் புலிகள் மறுப்பு!

Advertiesment
முதன்மை முகாம் அழிக்கப்பட்டதா? விடுதலைப் புலிகள் மறுப்பு!
, புதன், 23 ஜனவரி 2008 (20:51 IST)
சிறிலங்க விமானப் படை இன்று நடத்திய தாக்குதலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய முகாம் அழிக்கப்பட்டதாக அந்நாட்டு அரசு வெளிட்ட செய்தியை மறுத்துள்ள விடுதலைப் புலிகள், சிறிலங்க அரசு மேற்கொண்டு வரும் மலிவுப் பிரச்சாரம் இது என்று கூறியுள்ளது.

தமிழ் மக்களைக் குழப்புவதற்காக இப்படிப்பட்ட பிரச்சாரத்தை சிறிலங்க அரசாங்கம் செய்து வருகிறது என புதினம் இணைய தளத்திற்கு அளித்துள்ள சிறப்பு நேர்காணலில் கூறியுள்ள விடுதலைப் புலிகள் இயக்கத்தின் இராணுவ பேச்சாளர் இராசையா இளந்திரையன், விடுதலைப் புலிகளின் தலைமை அழிந்தது என்று 1989 ஆம் ஆண்டிலும், 2004 ஆம் ஆண்டு நடந்த ஆழிப்பேரலையின் போதும் இப்படி சிறிலங்க அரசு பிரச்சாரம் செய்தது எல்லோரும் அறிந்த விடயம் என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil