இலங்கை, மன்னாரில் விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்க ராணுவத்தினருக்கும் இடையில் நடந்த கடுமையான மோதலின் இறுதியில் 12 ராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன் 27 பேர் படுகாயமடைந்தனர்.
மன்னார் பாலைக்குழியில் முகாமிட்டிருந்த சிறிலங்க ராணுவத்தினர் மீது நேற்று தமிழீழ விடுதலைப் புலிகள் தீவிரத் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலுக்கு ராணுவத்தினரும் பதில் தாக்குதல் நடத்தினர்.
இருதரப்புக்கும் இடையில் சுமார் 3 மணி நேரம் நீடித்த கடும் மோதலில் ராணுவத்தினர் 12 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 12 ராணுவத்தினர் படுகாயமடைந்தனர். விடுதலைப்புலிகளுக்கு எந்த இழப்பும் ஏற்படவில்லை.