ஆஃப்கானிஸ்தானில் நடப்பதைப் போன்ற புனிதப் போரை பாகிஸ்தானிலும் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதால், பாகிஸ்தான் படையினர் மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று பயங்கரவாதிகளுக்கு அல் கய்டா அழைப்பு விடுத்துள்ளது.
அல் கய்டா சார்பில் உஸ்பெகிஸ்தான் இஸ்லாமிய இயக்கம், வடக்கு வசிரிஸ்தான் உஸ்பெக் பயங்கரவாதிகள் இயக்கம் ஆகியவற்றின் தலைவன் காதிர் தாஹிர் யல்தேசிவ் விடுத்துள்ள இணையதள ஒளிப்படச் செய்தியில், இஸ்லாமாபாத்தைக் கைப்பற்றுவதற்கு பழங்குடியின அல் கய்டா ஆதரவாளர்கள் முயற்சிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும்,"லால் மசூதி மீதான தாக்குதலுக்கு பழிவாங்க வேண்டும். பாகிஸ்தானை இஸ்லாத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும். இஸ்லாமிய சட்டங்கள்தான் பாகிஸ்தானை ஆள வேண்டும்." என்றும் யல்தேசிவ் கூறியுள்ளதாக டெய்லி டைம்ஸ் இதழ் தெரிவிக்கிறது.