Publish Date: Fri, 18 Jan 2008 (13:52 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (19:47 IST)
ஜெர்மனியில் இருந்து ஈரானுக்கு அணு எரிபொருள் கடத்த முயன்றவரை ஜெர்மன் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
பெர்லினில் நேற்று கைது செய்யப்பட்ட அந்த நபரின் பெயர் அகமது என்றும், இயற்பியல் ஆராய்ச்சியில் டாக்டர் பட்டம் பெற்றுள்ள அவர் 54 வயதுடையவர் என்றும் ஜெர்மன் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவர் கடந்த 2007 ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை ஜெர்மன் ஏற்றுமதி விதிகளுக்கு முரணாக, அணு எரிபொருள் என்று சந்தேகிக்கப்படும் பொருட்களைக் கடத்த முயன்றதாக குற்றம்சாற்றப்பட்டு உள்ளது.
முன்னதாக பெர்லினில் உள்ள அகமதுவின் வீட்டில் நடத்திய சோதனையில் சந்தேகத்திற்குரிய பல்வேறு ஆவணங்கள் சிக்கியதாகத் தெரிகிறது. ஆனால், அவற்றின் விவரங்களை அதிகாரிகள் வெளியிடவில்லை.
Webdunia
Publish Date: Fri, 18 Jan 2008 (13:52 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (19:47 IST)