துபாயில் வேலை செய்துகொண்டிருந்தபோது இரண்டு இந்தியர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.
சார்ஜா தொழிற்சாலை வளாகம் எண் 10-ல் இந்தியாவை சேர்ந்த அனில்குமார் (28), முஜீப் அல் ரஹ்மான் (43) ஆகியோர் மின்சார கம்பத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக ரஹ்மானை மின்சாரம் தாக்கியது. அவரை காப்பாற்ற முயன்ற அனில்குமாரையும் மின் தாக்கியது; அவர் உயிரிழந்தார். ரஹ்மான் பலத்த காயத்துடன் தப்பினார்.
அதேபோல், துபாயில் நடந்த மற்றொரு விபத்தில் கேரள மாநிலம் திரிச்சூரை சேர்ந்த கபிர்ம் (28) மின்தாக்கி உயிரிழந்தார். இவருக்கு மூன்று வயதிலும், ஐந்து வயதிலும் இரண்டு குழந்தைகள் உள்ளன.