Publish Date: Wed, 16 Jan 2008 (15:50 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (19:47 IST)
இலங்கையில் இன்று காலை நடந்த பயணிகள் பேருந்தில் குண்டு வெடித்தில் குழந்தைகள் உட்பட 26 பேர் உயிரிழந்தனர். 64 பேர் படுகாயம் அடைந்தனர்.
தென்-கிழக்கு சிறிலங்காவில், புட்டாலாவில் இருந்து ஒக்கம்பட்டியா பகுதிக்கு அதிகமானவர்களை ஏற்றிக்கொண்டு ஒரு பயணிகள் பேருந்து சென்று கொண்டிருந்தது. மோனரகலா என்ற இடத்தில் செல்லும்போது, பேருந்தில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது. இதில் 26 பேர் கொல்லப்பட்டனர். 64க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவற்றில் பெரும்பாலானோர் குழந்தைகள் என்று கூறப்படுகிறது.
'இந்த குண்டு வெடிப்பிற்கு தமிழீழ விடுதலைப்புலிகள் தான் காரணம். காயமடைந்தவர்கள் அப்பகுதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்' என்று அந்நாட்டு பாதுகாப்பு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழீழ் விடுதலைப்புலிகள் மற்றும் சிறிலங்கா அரசுக்கு இடையேயான 2002ம் ஆண்டு நார்வே அமைதி ஒப்பந்தம் தொடர்பாக போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு சிறிலங்காவில் முகாமிட்டிருந்தது. இக்குழு இன்று வெளியேற உள்ள நிலையில், இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அமைதி ஒப்பந்தத்தில் இருந்து சிறிலங்கா அரசு தன்னிச்சையாக வெளியேறியதற்கு உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த உறுப்பினர்களும் எதிர்ப்பு தெரிவிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.