மேற்கு ஆப்கானிஸ்தானில் கடந்த சில நாட்களாக வீசி வரும் பனிப் புயலில் சிக்கி 52 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோரியன், சிந்துபாத் மாகாணங்களில் பனிப் புயலின் தாக்கம் அதிகமாக உள்ளதாகவும், இங்கு மட்டும் 17 பேரைக் காணவில்லை என்றும் அரசு செய்தித் தொடர்பாளர் ஃபர்சானா அகமதி தெரிவித்தார்.
ஹெராட் மாகாணத்தில் பல்வேறு முக்கியச் சாலைகளில் பனிக்கட்டிகள் குவிந்துள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் கிராமங்களுக்கு அடிப்படைத் தேவைப் பொருட்களைக் கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கடந்த பத்து ஆண்டுகளில் பனிப்பொழிவுக்கு இவ்வளவு பேர் பலியாகியுள்ளது இதுதான் முதல்முறை என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர்.