Publish Date: Sun, 13 Jan 2008 (16:26 IST)
Updated Date: Sun, 13 Jan 2008 (16:26 IST)
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோவின் சமாதிக்கு அந்நாட்டு அதிபர் முஷாரஃப் வரக்கூடாது என்று பெனாசிரின் கணவர் ஆஷிப் அலி ஜர்தாரி எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
பெனாசிரின் உடல் லர்கானாவில் உள்ள அவரின் சொந்தக் கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அங்கு, பெனாசிரின் சமாதியில் நாள்தோறும் நூற்றுக்கணக்கானவர்கள் இன்றும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பாகிஸ்தான் அதிபர் பர்வேஷ் முஷாரஃப்பும் அஞ்சலி செலுத்துவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார்.
இதைக் கண்டித்துள்ள பெனாசிரின் கணவர் ஆஷிப் அலி ஜர்தாரி கூறுகையில், "பெனாசிர் சமாதியில் முஷாரஃப் அஞ்சலி செலுத்தக்ககூடாது. அதை பாகிஸ்தான் மக்கள் கட்சி தொண்டர்களும் ஏற்கமாட்டார்கள். மீறி அவர் சென்றால் மக்கள் கொந்தளிப்பார்கள்" என்றார்.