போர் நிறுத்தக் கண்காணிப்பு ஒப்பந்தத்தில் இருந்து சிறிலங்கா அரசு தன்னிச்சையாக விலகியதைத் தொடர்ந்து, சிறிலங்காவில் நிலவும் சூழல் பற்றி ஆய்வு செய்வதற்காக அமைதிக்குழு ஒன்று அனுப்பி வைக்கப்படும் என்று ஜப்பான் அயலுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சிறிலங்காவுக்கான ஜப்பான் சிறப்புத் தூதர் யசூகி அகாசி தலைமையிலான இக்குழுவினர் ஜனவரி 13 ஆம் தேதி, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்துப் பேசுவர் என்று கூறியுள்ள ஜப்பான் அயலுறவு அமைச்சகம், விடுதலைப் புலிகளைச் சந்திப்பது பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.
இதற்கிடையில், இலங்கை இனப் பிரச்சனைக்கு பேச்சின் மூலம் தீர்வு காண்பதற்குத் தேவையான எல்லா முயற்சிகளையும் ஜப்பான் முன்னின்று எடுக்கும் என்று அந்நாட்டின் அயலுறவு அமைச்சர் மசாகியோ குமுரா கூறியுள்ளார்.