Publish Date: Tue, 08 Jan 2008 (19:16 IST)
Updated Date: Tue, 08 Jan 2008 (19:16 IST)
கொலை முயற்சியில் இருந்து மாலத்தீவு அதிபர் மெளமூன் அப்துல் கையூம் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
மாலத்தீவின் வடக்குப் பகுதியில் உள்ள ஹோராஃபுசி என்ற இடத்தில் இன்று நடந்த பொது நிகழ்ச்சி ஒன்றில் அதிபர் மெளமூன் அப்துல் கையூம் பேசிக் கொண்டிருந்த போது, அருகில் நின்று கொண்டிருந்த சிறுவன் அவரின் வயிற்றில் கத்தியால் குத்த முயன்றான்.
இதைக் கண்டு சுதாரித்துக் கொண்ட பாதுகாவலர்கள் அவனைத் தடுத்துப் பிடித்தனர். இதனால் அதிபர் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இத்தகவலை மாலத்தீவு செய்தித் துறை அமைச்சர் முகமது நஷீத் தொலைபேசியில் தெரிவித்தார். கொலை முயற்சிக்கான காரணம் என்னவென்று உடனடியாகத் தெரியவில்லை.