Publish Date: Mon, 07 Jan 2008 (19:12 IST)
Updated Date: Mon, 07 Jan 2008 (19:12 IST)
மலேசியாவில் சமஉரிமை கேட்டு இந்திய வம்சாவழியினர் நடத்திய போராட்டம் தொடர்பாக இந்தியாவும் மலேசியாவும் இன்று விவாதித்துள்ளன.
மலேசியா சென்றுள்ள மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோணி அங்கு, மலேசிய பாதுகாப்பு அமைச்சர் நாஜிப் ரசாக்கைச் சந்தித்த போது இந்தப் பேச்சு நடந்துள்ளது.
ஆனால், என்னென்ன விடயங்கள் விவாதத்தில் இடம்பெற்றன என்பதை இருதரப்பும் தெரிவிக்கவில்லை.
இதையடுத்து இருவரும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்த போது, "மலேசியாவில் நிலவும் அரசியல் சூழ்நிலை குறித்து இந்தியா உணர்ந்துள்ளது" என்றார் நாஜிப்.
இதுபற்றி, ஏ.கே. அந்தோணியிடம் கேட்டதற்கு கருத்து கூற மறுத்துவிட்டார்.