சர்வதேசப் பயங்கரவாத இயக்கமான அல் கய்டா, அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், பாகிஸ்தான் அதிபர் பர்வேஷ் முஷாரஃப் ஆகியோருக்கு இணையதளம் மூலம் கொலை மிரட்டல் விடுத்துள்ளது.
அல் கய்டா இயக்கத்தின் அமெரிக்க பிரிவுத் தலைவர் ஆதாம் கான் விடுத்துள்ள இணையதளச் செய்தியில் கூறியிருப்பதாவது:
அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் நாளை செவ்வாய்க் கிழமை முதல் மத்திய கிழக்கு நாடுகளில் சுற்றுப் பயணம் செய்கிறார். அப்போது அவரை வரவேற்க பூ மழை பொழியாது. அதற்குப் பதிலாக குண்டு மழை பொழிந்து எங்கள் இயக்கத்தினர் அவரை வரவேற்பார்கள்.
இதே போல பாகிஸ்தான் அதிபர் பர்வேஷ் முஷாரஃபையும் கொலை செய்ய வேண்டும். அதற்கு முஸ்லிம்கள் தயாராக வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்தவீடியோ செய்தி 50 நிமிடங்களுக்கு ஓடுகிறது.
இதுபற்றி வெள்ளை மாளிகைச் செய்தித் தொடர்பாளர் கார்டன் ஜான்ட்ரோவிடம் கேட்டதற்கு, இந்த மிரட்டலுக்கு எல்லாம் நாங்கள் பயப்படுவதில்லை என்றார்.