இந்தோனேசியாவின் பப்புவா தீவில் இன்று அதிகாலை கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சுனாமி அபாயம் ஏதுமில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பப்புவா தீவின் வடக்குக் கடற்கரையில் கடலுக்கு அடியில் 22 மைல் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவு கோளில் 6.2 ஆகப் பதிவானதாக அமெரிக்க வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நள்ளிரவு 2.13 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கியதாகவும், சேத விவரங்கள் எதுவும் உடனயாகத் தெரியவில்லை என்றும் இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்தனர்.