Publish Date: Fri, 04 Jan 2008 (11:15 IST)
Updated Date: Fri, 04 Jan 2008 (11:14 IST)
இலங்கை, வவுனியாவில் சிறிலங்கா ராணுவத்திற்கும் , விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடந்த கடுமையான மோதலில் 3 ராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதுடன், 6 பேர் காயமடைந்துள்ளனர்.
வவுனியா பாலமொட்டைப் பகுதியில் நேற்று மாலை 5.20 மணிக்கு விடுதலைப் புலிகளின் நிலைகளை சிறிலங்கா ராணுவத்தினர் தாக்கத் தொடங்கினர். இயந்திரத் துப்பாக்கிகள், சிறிய வகை பீரங்கிகளுடன் இத்தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து விடுதலைப் புலிகள் பதிலடித் தாக்குதல் நடத்தினர். சுமார் 40 நிமிடங்கள் நீடித்த இந்த மோதலின் இறுதியில் ராணுவத்தினர் பின்வாங்கினர்.
இந்த மோதலில் 3 படையினர் கொல்லப்பட்டதுடன், 6 பேர் காயமடைந்துள்ளதாகவும், தங்கள் தரப்பில் இழப்பு ஏதுமில்லை என்றும் புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ராணுவத்தினரிடம் இருந்து வெடிபொருட்கள், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் புலிகள் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Webdunia
Publish Date: Fri, 04 Jan 2008 (11:15 IST)
Updated Date: Fri, 04 Jan 2008 (11:14 IST)