சிறிலங்காவில் ராணுவ சரக்கு வாகனம் ஒன்று கண்ணிவெடியில் சிக்கியதில் படையினர் 3 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர்.
இன்று காலை 9.30 மணிக்கு அநுராதபுரத்தில் இருந்து ராணுவத்தினருக்கான பொருட்களை ஏற்றிக் கொண்டு மணலாறு நோக்கிச் சென்று கொண்டிருந்த சரக்கு வாகனம் (டிரக்) ஒன்று கண்ணிவெடியில் சிக்கியது.
இதில் 3 படையினர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர். இவர்கள் மூவரும் உடனடியாக கெப்பிட்டிக்கொல்லாவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இது குறித்து அனுராதபுரம் காவல் நிலைய அதிகாரி ஒருவர் கூறுகையில், "இந்த தாக்குதலையடுத்து பாதுகாப்பைப் பலப்படுத்தும் வகையில் படையினர் குவிக்கப்பட்டனர். படையினருடன், காவல்துறையினரும் இணைந்து தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்." என்றார்.