பாகிஸ்தானில் பொதுத் தேர்தல் தேதி மாற்றப்பட்டது குறித்துக் கருத்து கூற ஐ.நா. மறுத்துவிட்டது.
ஐ.நா. செய்தித் தொடர்பாளர் மைக்கேல் மொன்டாசிடம், பாகிஸ்தானில் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டதால் ஜனநாயக நடைமுறைகளுக்கு பாதிப்பு ஏற்படுமா? என்று கேட்டதற்கு, "தேர்தல் என்பது பாகிஸ்தானின் உள் விவகாரம்" என்றார்.
மற்றொரு கேள்விக்கு, பாகிஸ்தான் தேர்தல் விவகாரங்களில் ஐ.நா. தலையிடாது என்று பதிலளித்தார் மொன்டாஸ்.
இதற்கிடையில், பெனாசிர் புட்டோ கொல்லப்பட்டது தொடர்பாக ஸ்காட்லாந்து யார்ட் காவல்துறையினர் விசாரிக்க உள்ளதால், அதில் ஐ.நா. தலையிடத் தேவையில்லை என்று அமெரிக்கா கூறியுள்ளது.
அதேநேரத்தில், முஷாரஃப் அரசு விசாரணையைத் திசை திருப்ப முயலக் கூடும் என்று பாகிஸ்தான் மக்கள் கட்சியினர் கூறியுள்ள குற்றச்சாற்றுகளுக்கு பதிலளிக்க அமெரிக்கா மறுத்துவிட்டதும் குறிப்பிடத்தக்கது.