தான் கொல்லப்பட்டால் பர்வேஸ் முஷாரஃப் தான் பொறுப்பு என்று பெனாசிர் புட்டோ தனது சி.என்.என். தொலைக்காட்சி நண்பருக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சல் குற்றச்சாற்றை பாகிஸ்தான் அரசு மறுத்துள்ளது.
இது குறித்து முஷாரஃப்பின் செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ரஷீத் கரேஷி கூறுகையில், பெனாசிர் புட்டோவிற்கு எதுவும் நடக்காமல் இருந்ததற்கு முஷாரஃப் தான் பொறுப்பு என்றார்.
பெனாசிரின் மின்னஞ்சலில் கூறப்பட்டுள்ள குற்றச்சாற்றுகள் கருத்து சொல்ல முடியாத அளவிற்கு கேளியானவை என்றும் அவர் குறிப்பிட்டார்.