எதிர்வரும் ஆண்டு சிறிலங்கா ராணுவத்தின் முப்படைகள், குடிமக்கள் பாதுகாப்புப் படையினர் மற்றும் பணியாளர்களுக்கு சம்பளம் உள்ளிட்ட செலவுகளுக்க் 9,000 கோடி ரூபாய் தேவைப்படும் என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
கடந்த ஆண்டு சேவையிலிருந்து விலகிச் சென்றவர்களை மீண்டும் வந்து இணையுமாறு அரசு விடுத்த கோரிக்கையை ஏற்று, சுமார் 5,000 பேர் மீண்டும் இராணுவத்தில் இணைந்துள்ளதால் இந்த செலவு மேலும் அதிகரிக்கலாம் என கூறப்படுகின்றது.
அதேவேளையில், புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்டு உள்ளவர்களுக்கான பயிற்சிகளை விரைவில் நிறைவு செய்யும் திட்டம் இருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.