பெனாசிர் புட்டோவின் மரணத்திற்கு பொறுப்பேற்று அதிபர் பர்வேஷ் முஷாரஃப் பதவி விலக வேண்டும் என்று தெஹ்ரிக் இ இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான் கான் வலியுறுத்தியுள்ளார்.
தனக்கு உரிய பாதுகாப்பில்லை என்று பெனாசிர் வெளிப்படையாகக் கூறியும் அதை கவனிக்க பாகிஸ்தான் அரசு மறுத்துவிட்டது என்று கூறிய இம்ரான் கான், பாகிஸ்தானில் வசிக்கும் யாருடைய உயிருக்கும் உத்தரவாதம் இல்லை என்றார்.
பாகிஸ்தானில் வசிக்கும் 80 விழுக்காட்டினர் பர்வேஷ் முஷாரஃப்பை வெறுப்பதாகவும், முஷாரஃப்பின் தனிநபர் ஆதிக்கத்தை கண்டிப்பதற்கு உலக நாடுகள் முன்வர வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
இதற்கிடையில், பாகிஸ்தானில் நடக்கவுள்ள பொதுத் தேர்தலைப் புறக்கணிக்க போவதாக அந்நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.