இலங்கையில் வெங்காயம், சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது.
காய்ந்த மிளகாய், வெங்காயம், கடலைப் பருப்பு, பயறு உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்டு வந்த வரிச் சலுகைகளை சிறிலங்கா அரசு ரத்து செய்துள்ளது.
இதனால், மாவு வகைகளின் விலை ரூ.5 வரையிலும், உள்நாட்டு அரிசியின் விலை ரூ.5 வரையிலும் அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
சுங்க வரி, வருமான வரி ஆகியவற்றுடன் பாதுகாப்பு வரியையும் செலுத்துவதால் பொருட்களின் விலைகளை அதிகரிப்பது தவிர்க்க முடியாது என்று இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கெனவே உள்நாட்டுப் போரால் கடுமையான பாதிப்பிற்கு ஆளாகியிருக்கும் அப்பாவி மக்கள், இந்த விலை உயர்வினால் மேலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.