இலங்கையில் ராமாயணத்துடன் தொடர்புடைய இடங்களைச் சுற்றுலா தளங்களாக மேம்படுத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து இலங்கை சுற்றுலா வளர்ச்சி நிறுவனத் தலைவர் எஸ்.கலைச்செல்வம் கூறுகையில், "எங்களது நிபுணர் குழு இந்தியாவுக்குச் சென்று இத்திட்டம் குறித்து ஆய்வு செய்துவருகிறது. ராமாயணத்தில் வரும் சம்பவங்கள் தொடர்பான இடங்களை சுற்றுலா மையங்களாக மேம்படுத்துவதில் இந்திய அரசின் உதவியை நாங்கள் நாடியுள்ளோம்" என்றார்.
இந்திய சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் இதிகாச இடங்களில் ஒலி, ஒளிக் காட்சி, போக்குவரத்து வசதி உள்ளிட்ட பிற வசதிகளை ஏற்பாடு செய்யவும் திட்டமிட்டுள்ளோம் என்றும் அவர் கூறினார்.
இலங்கை இராவணனால் ஆளப்பட்டது என்று ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இலங்கையில் ராமாயணத்தில் வரும் சம்பவங்கள் தொடர்புடைய இடங்களைக் கண்டுகளிக்க ஹிந்து பக்தர்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் இத்திட்டம் வாய்ப்பளிக்கும்.