கூட்டு ராணுவப் பயிற்சிகள் பயங்கரவாத எதிர்ப்புப் போரில் இருநாடுகளுக்கும் பயனளிப்பதுடன், இருதரப்பு நம்பிக்கையை வளர்ப்பதற்கும் உதவும் என்று சீனா கூறியுள்ளது.
இரண்டாம் நாளாக குன்மிங் நகரில் இன்று அதிகாலை 6.30 மணிக்கு இந்திய சீன வீரர்களின் கூட்டுப் பயிற்சி தொடங்கிய போது செய்தியாளர்களிடம் பேசிய சீன தளபதி லியூ யாங்சின் இவ்வாறு கூறினார்.
இருதரப்பு ராணுவத்தினரும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துகொள்வதற்கு இந்தக் கூட்டுப் பயிற்சி உதவுவதாகவும், அடுத்தமுறை இரதரப்பினரும் சந்தித்துக் கொள்ளும் போது படைகளின் செயல்பாட்டில் ஒருங்கிணைப்பு எற்படும் என்றும் அவர் கூறினார்.
கூட்டுப் பயிற்சி குறித்துக் கருத்து தெரிவித்த நமது தளபதி கலோனல் ஜெ.எஸ்.புத்வார், இத்தகைய பயிற்சிகளின் மூலம் எல்லா சூழ்நிலைகளிலும் துணிந்து செயல்படும் தைரியம் வீரர்களுக்கு உருவாகிறது என்றார்.