ஈராக்கில் தியாலா மாகாணத்தில் உள்ள மக்ததியாஹ் என்ற இடத்தில் அல் காய்டா பயங்கரவாதிகள் தங்கள் எதிரிகளை சித்ரவதை செய்து கொல்வதற்குப் பயன்படுத்திய கூடங்களை அமெரிக்க கடற்படையினரும், ஈராக் ராணுவத்தினரும் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த மாதத் தொடக்கத்தில் அமெரிக்க படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில், அல் காய்டா இயக்கத்தினர் பயன்படுத்திய மறைவிடங்களையும் சித்ரவதைக் கூடத்தையும் கண்டுபிடித்தனர். அதில், உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட 26 பேரின் அறைகுறை உடல்கள் மீட்கப்பட்டன.
அந்த இடத்திற்கு அருகில்தான் புதிய சித்ரவதைக் கூடம் அமைந்துள்ளதாக அமெரிக்க கடற்படையின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
சுவர்களிலும் மேற்கூரையிலும் ஏராளமான சங்கிலிகள், மின் இணைப்புடன் கூடிய படுக்கைகள், இரத்தக் கறையுடன் கூடிய பொருட்கள் எனப் பார்ப்பதற்கே பயங்கரமாக அந்தக் கூடம் உள்ளது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.