பாகிஸ்தானுக்கு அச்சுறுத்தலாக உள்ள பயங்கரவாதிகளைப் பிடிக்கும் வேலையை விட்டுவிட்டு அரசியலில் தலையிடும் போக்கை உளவு நிறுவனங்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று அந்நாட்டின் முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ கோரிக்கை விடுத்துள்ளார்.
பொதுத் தேர்தலில் போட்டியிடும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் வேட்பாளர்களை உளவு அமைப்புகள் தொடர்ந்து மிரட்டி வருவதாகக் குற்றம்சாற்றிய பெனாசிர், அரசியல் தேவைகளுக்காக உளவு அமைப்புகளைப் பயன்படுத்துவது அதிகரித்தால் நாடு நெருக்கடியைச் சந்திக்கும் என்று எச்சரித்தார்.
இதுபோன்ற புகார்களை தேர்தல் ஆணையம் முறைப்படி விசாரித்து, முறைகேடற்ற தேர்தல் நடக்கும் என்பதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.