நமது சூரியக் குடும்பத்தில் உள்ள செவ்வாய் கிரகம் பூமியை நெருங்கி வருவதால் இன்று முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி வரை வெறும் கண்களால் பார்க்க முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மாலையில் சூரியன் மறைந்த பிறகு வானில் கிழக்கு திசையில் சிவப்பு நிறப் புள்ளியாகத் தோன்றும் செவ்வாய் கிரகத்தை 30 நிமிடங்களுக்கு தொலைநோக்கி இன்றித் தெளிவாகப் பார்க்க முடியும்.
பிப்ரவரி வரை செவ்வாய் கிரகத்தைப் பார்க்க முடியும் என்றாலும், ஜனவரி கடைசி வாரத்தில் இருந்து செவ்வாய் கிரகம் மங்கலாகத்தான் தெரியும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
செவ்வாய் கிரகம் 26 மாதங்களுக்கு ஒருமுறை பூமியை நெருங்கி வருகிறது. கடந்த 2003 ஆம் ஆண்டை விட இந்த முறை இன்னும் தெளிவாகத் தெரிய உள்ளது.