Newsworld News International 0712 17 1071217047_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பா‌கி‌ஸ்தா‌னி‌ல் த‌ற்கொலை‌த் தா‌க்குத‌ல் : 9 ராணுவ‌த்‌தின‌ர் ப‌லி!

Advertiesment
பா‌கி‌ஸ்தா‌‌‌ன் த‌ற்கொலை‌த் தா‌க்குத‌ல் பெஷாவ‌ர்
, திங்கள், 17 டிசம்பர் 2007 (16:30 IST)
பா‌கி‌ஸ்தா‌னி‌‌ன் பெஷாவ‌ர் நக‌ரி‌ல் ராணுவ‌த்‌தின‌ரி‌ன் ‌மீது த‌ற்கொலை‌ப்படை பய‌ங்கரவா‌தி நட‌த்‌திய வெடிகு‌ண்டு தா‌க்குத‌லி‌ல் 9 பே‌ர் கொ‌ல்ல‌‌ப்ப‌ட்டன‌ர்.

வடமே‌ற்கு மாகாண‌த்‌தி‌ன் தலைநகரான பெஷாவரு‌க்கு அரு‌கி‌ல் நட‌ந்த ‌விளையா‌ட்டு‌‌ப் போ‌ட்டிக‌ளி‌ல் ப‌ங்கே‌ற்ற ‌பிறகு முகா‌மி‌ற்கு‌த் ‌திரு‌ம்‌பி‌க் கொ‌ண்டிரு‌ந்த ராணுவ‌த்‌தின‌ரி‌ன் ‌மீது இ‌த்தா‌க்குத‌ல் நட‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளது.

பொதும‌க்க‌ள் பய‌ன்படு‌த்து‌ம் சாலை‌யி‌ல் ராணுவ‌த்‌தின‌ர் அ‌‌ணிவகு‌த்து வ‌ந்தபோது, ‌எ‌தி‌ரி‌ல் வ‌ந்த பய‌ங்கரவா‌தி தனது இடு‌ப்‌பி‌ல் க‌ட்டி‌யிரு‌ந்த வெடிகு‌ண்டை வெடி‌க்க‌ச் செ‌ய்தா‌ன் எ‌ன்று ‌நிக‌ழ்வை நே‌ரி‌ல் பா‌ர்‌த்தவ‌ர்க‌ள் தெ‌ரி‌வி‌த்தன‌ர்.

பெஷாவ‌ரி‌ல் உ‌ள்ள ராணுவ‌ப் ப‌ள்‌ளி ம‌ற்று‌ம் ராணுவ‌த் தலைமையக‌த்‌தை தா‌க்கு‌ம் நோ‌க்க‌த்துட‌ன் வ‌ந்த பய‌ங்கரவா‌தி, அது முடியாததா‌ல் ராணுவ‌த்‌தினரை‌த் தா‌க்‌கியு‌ள்ளா‌ன் எ‌ன்று ராணுவ‌ச் செ‌ய்‌தி‌த் தொட‌ர்பாள‌ர் அ‌ர்ஷா‌த் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

பா‌கி‌ஸ்தா‌னி‌ல் ராணுவ‌த்‌தின‌ர் ‌மீது நட‌த்த‌ப்‌ப‌ட்டு‌ள்ள தா‌க்குத‌ல்களு‌க்கு இதுவரை எ‌ந்த இய‌க்கமு‌ம் பொறு‌ப்பே‌ற்க‌வி‌ல்லை எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

Share this Story:

Follow Webdunia tamil