எரிசக்தி ஒத்துழைப்பு தொடர்பாக ஈரானின் மூத்த அணு விஞ்ஞானி சயீத் ஜலிலியுடன் மத்திய அயலுறவுச் செயலர் சிவசங்கர் மேனன் பேச்சு நடத்தியுள்ளார்.
துபாயில் நேற்று நடந்த இந்தச் சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஜலிலி, "ஈரானுடன் பாதுகாப்பு, சரக்குப் போக்குவரத்து, எரிசக்தி போன்ற துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த இந்தியா விரும்புகிறது. ஆனால், இந்த ஒத்துழைப்பு அணுசக்தி விவாகரத்திலும் இருக்குமா என்று தெரியவில்லை" என்றார்.
இந்தியாவுக்கும் ஈரானுக்கும் இடையில் பொருளாதாரம், அரசியல் போன்ற முக்கிய விடயங்களில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உறவுகள் நீடிக்கின்றன என்ற ஜலிலி, உலகில் இரண்டு முக்கியச் சக்திகளான இந்தியா மற்றும் ஈரான் இடையிலான எரிசக்தி ஒத்துழைப்பு உறவுகள் மேலும் வலுப்பட வேண்டும் என்றார்.
ஆசியாவில் நிலையான அமைதியை உருவாக்குவதற்காக எல்லா நாடுகளுடனும் நல்லுறவை மேம்படுத்த இந்தியா எப்போதும் விரும்புகிறது என்று சிவசங்கர் மேனன் குறிப்பிட்டார்.