சிறிலங்காவில் ஐ.நாவின் மனித உரிமைகள் கண்காணிப்பு அலுவலகத்தை அமைக்க உதவ வேண்டும் என்று அந்நாட்டு அரசுக்கு அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஜெனீவாவில் நடந்த மனித உரிமைகள் அவைக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அமெரிக்கப் பிரதிநிதிகள், சிறிலங்காவில் மனித உரிமைகள் கண்காணிப்பகம் அமைந்தால், அரசின் மனித உரிமைகள் தொடர்பான நடவடிக்கைகளை மேம்படுத்த எளிதாக இருக்கும் என்றனர்.
மனித உரிமைகள் கண்காணிப்பகத்தை எதிர்க்கும் முடிவை சிறிலங்க அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
இக்கூட்டத்தில் பேசிய ஐ.நா. மனித உரிமைகளுக்கான ஆணையர் லூய்ஸ் ஹார்பர், சிறிலங்காவில் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக உண்மையான தகவல்களைப் பெறுவதற்கு தன்னிச்சையாக இயங்கும் மனித உரிமை கண்காணிப்பாளர்கள் தேவை என்றார்.